இனிப்பு சீடை
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு – 1 கப்
தேங்காய் துருவல் – 1/4 கப்
வெல்லம் – 1 கப்
எள் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல் , பச்சரிசி மாவு ,வெல்லம் மற்றும் எள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் . பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , காய்ந்ததும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான இனிப்பு சீடை தயார் !!!