பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையான பொருட்கள் :
பட்டர் பீன்ஸ் – 1/4 கிலோ
வெங்காயம் – 1
முந்திரி – 6
கசகசா – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 1
லவங்கம் – 1
தேங்காய் துருவல் – 1/2 கப்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டர் பீன்சுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயுடன் கசகசா, முந்திரி,பட்டை , சோம்பு, லவங்கம், மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் , மிளகாய்த்தூள் , பட்டர் பீன்ஸ் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கிளறி, எண்ணெய் தெளிய இறக்கினால் பட்டர்பீன்ஸ் பொரியல் தயார் !!!