சுவையான கேரட் அல்வா செய்வது எப்படி..
தேவையான பொருட்கள்:
கேரட் – 5
பால் – 2 கப்
சர்க்கரை – 2 1/2 கப்
நெய் – 1/2 கப்
கண்டென்ஸ்டுமில்க் – 2 கப்
ஏலக்காய் – 6
முந்திரி – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட்டை தோல் நீக்கி , துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை சிறிது பாலுடன் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.ஒரு கடாயில் நெய் ஊற்றி அரைத்த கேரட் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் மற்றும் பால் சேர்த்து வேக விட வேண்டும். கை விடாமல் கிளறி , வெந்ததும் ஏலக்காய் பொடி, வறுத்த முந்திரி சேர்த்து இறக்கினால் சுவையான கேரட் அல்வா தயார் !!!