Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு முட்டைக் குழம்பு செய்வது எப்படி !!!

செட்டிநாடு முட்டைக் குழம்பு

தேவையான  பொருட்கள் :

முட்டை –  5

சின்ன வெங்காயம் – 10

பச்சைமிளகாய் – 2

தக்காளி – 2

இஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

மிளகுத்தூள் –  1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் – 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1/4  டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1  டீஸ்பூன்

சோம்பு –   1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2  டீஸ்பூன்

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லித்தழை – சிறிதளவு

உடைத்த முட்டைக் குழம்பு  க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு  கடாயில்  எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம் , சின்ன வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து  வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் மல்லித்தூள் , மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கி   தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.  மற்றொரு கடாயில்  எண்ணெய் ஊற்றி, முட்டையை ஊற்றி 1 நிமிடம் கழித்து  குழம்பில் ஊற்றி மூடி  ஐந்து நிமிடம் குழம்பை வேக விடவும்.பின்  இதில்  மிளகுத்தூள் மற்றும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் செட்டிநாடு முட்டைக் குழம்பு  தயார் !!!

Categories

Tech |