செட்டிநாடு ரசம்
தேவையான பொருட்கள் :
தனியா – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 3/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/4 ஸ்பூன்
தக்காளி – 1
நெய் – சிறிதளவு
புளி – சிறிது
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு தனியா , மிளகு , சீரகம் , உளுந்தம்பருப்பு சேர்த்து வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் நெய் ஊற்றி சீரகம் , கடுகு தாளித்து தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . பின் மஞ்சள் தூள் , புளிக் கரைசல் , உப்பு , கொத்தமல்லித்தழை மற்றும் அரைத்த பொடி சேர்த்துக் கிளறி சிறிது கொதி விட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு ரசம் தயார் !!!