Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆப்பம் , சப்பாத்தி , இடியாப்பத்திற்கு தொட்டுக்க தேங்காய் பால் சொதி செய்வது எப்படி !!!

தேங்காய் பால் சொதி

தேவையான பொருட்கள் :

கெட்டியான தேங்காய் பால் –  1  கப்

இஞ்சி – சிறிய துண்டு

எலுமிச்சை சாறு – 1  ஸ்பூன்

கொத்தமல்லி இலை – சிறிதளவு

உப்பு – தேவைக்கேற்ப

வேகவைக்க :

கேரட் –  1

பீன்ஸ் -10

முருங்கைக்காய் –  1

உருளைக்கிழங்கு – 1

பச்சை பட்டாணி – 1/2  கப்

பாசிப்பருப்பு – 1/4 கப்

தாளிக்க :

எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

பட்டை –  1

பிரியாணி  இலை –  1

கிராம்பு –  2

ஏலக்காய் –  2

சின்னவெங்காயம் –  5

பூண்டு –  2 பற்கள்

பச்சை மிளகாய் –  3

கறிவேப்பிலை –  சிறிதளவு

மஞ்சள் தூள் –  1/4  ஸ்பூன்

இடியாப்பம்க்கான பட முடிவுகள்

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் வேகவைக்க கொடுத்த  காய்கறிகளை போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து வேகவைத்துக் கொள்ள வேண்டும்.  பாசிப்பருப்பை 3 விசில் விட்டு குக்கரில் போட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். இஞ்சியை அரைத்து  சாறு எடுத்துக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய்  ஊற்றி தாளிக்க கொடுத்த பொருட்களை போட்டு , வேக வைத்த காய்கறி , உப்பு மற்றும் பருப்பு சேர்த்து 5 நிமிடம் வேக விடவேண்டும் .பின் இதனுடன் தேங்காய் பால் சேர்த்து இறக்கி இஞ்சி சாறு , எலுமிச்சை சாறு மற்றும் மல்லி இலை சேர்த்து கலந்தால் சுவையான தேங்காய் பால் சொதி தயார் !!!

 

Categories

Tech |