கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 1 கப்
கறிவேப்பிலை – 1 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கடுகு – 1/2 தேக்கரண்டி
பூண்டு – 5 பற்கள்
காய்ந்த மிள்காய் – 4
தக்காளி – 1
தனியா பொடி – 1 மேஜைக் கரண்டி
எண்ணெய் – 1 மேஜைக் கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, அரைத்துக்கொள்ள வேண்டும்.பின் கடாயில் எண்ணெய் விட்டு , கடுகு , வெந்தயம், பூண்டு, வெங்காயம் போட்டு வதக்கியதும் நறுக்கிய தக்காளி, புளிக் கரைசல் , அரைத்த கறிவேப்பிலை விழுது, தனியாத் தூள் , உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான கறிவேப்பிலை வெங்காயக் குழம்பு தயார் !!!