Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பிரெட் மில்க் அல்வா செய்வது எப்படி !!!

பிரெட் மில்க் அல்வா

தேவையான பொருட்கள்:

ஸ்வீட்  பிரெட் – 5   துண்டுகள்

பால் – 1 கப்
தேங்காய் துருவல் – 1/4  கப்
சர்க்கரை – 1/4 கப்
ஏலப்பொடி – 1/4  டீ ஸ்பூன்
முந்திரி  –  3
பாதாம் – 3
நெய் –  தேவையான அளவு
மில்க்மெய்ட் – 1/2  டேபிள் ஸ்பூன்
காய்ந்த திராட்சை – 1/2  டேபிள் ஸ்பூன்
வெணிலா எஸென்ஸ் – 2  துளிகள்
Bread க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் பிரெட்டின் ஓரங்களை நீக்கி  மிக்ஸியில்  போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள  வேண்டும். தேங்காய் துருவல், முந்திரி,பாதாம் பருப்பு  ஆகியவற்றை  அரைத்து எடுத்துக் கொள்ள  வேண்டும். ஒரு  கடாயில் பாலை சேர்த்து காய்ச்சி சர்க்கரை மற்றும் அரைத்த விழுது சேர்த்து கிளறி பிரெட் துகள்,  ஏலப்பொடியையும் சேர்த்து , குறைந்த தீயில் வைத்து கிளற  வேண்டும். கடைசியாக நெய் ,  திராட்சை,  மில்க்மெய்ட்  சேர்த்து  கிளறி இறக்கினால்  சுவையான பிரெட் மில்க் அல்வா  தயார் !!!

Categories

Tech |