சுவையான கொத்த மல்லி சாதம் செய்வது எப்படி …
தேவையான பொருட்கள்:
கொத்த மல்லி – 1 கட்டு
வேகவைத்து வடித்த சாதம் -1 கப்
பச்சை மிளகாய் – 3
வெங்காயம்- 1
பூண்டு – 2 பற்கள்
இஞ்சி – 1 சிறிய துண்டு
கடுகு -1/4 தே.கரண்டி
சீரகம் – 1/4 தே.கரண்டி
கடலை பருப்பு- 1/4 தே.கரண்டி
உளுந்து – 1/4 தே.கரண்டி
ந.எண்ணெய்- தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கொத்தமல்லி இலை , பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுந்து , கடலை பருப்பு , வெங்காயம் சேர்த்து வதக்கி , கொத்தமல்லி கலவை மற்றும் வேக வைத்த சாதத்தினை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான கொத்த மல்லி சாதம் தயார் !!!