நண்டு பிரட்டல்
தேவையான பொருட்கள் :
நண்டு – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 1/2 மூடி
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் நண்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் தேங்காயுடன் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , உளுத்தம்பருப்பு, வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும் . நன்கு கொதித்த பின் நண்டு மற்றும் அரைத்த விழுது சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான நண்டு பிரட்டல் தயார் !!!