சாதத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான சைடிஷ் முட்டை பட்டாணி பொரியல் செய்யலாம் வாங்க .
தேவையான பொருட்கள்:
பட்டாணி – 250
முட்டை – 5
பல்லாரி – 1
பச்சை மிளகாய் – 1
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் பட்டாணியுடன் உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டையுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் முட்டையை ஊற்றி கிளற வேண்டும். பின்னர் இதனுடன் பட்டாணி, மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான முட்டை பட்டாணி பொரியல் தயார் !!!