மாங்காய் பருப்பு குழம்பு
தேவையான பொருட்கள் :
மாங்காய் – 1
துவரம்பருப்பு – 1/4 கப்
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் துவரம்பருப்பை நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். மாங்காயை தண்ணீர் விட்டு தனியே வேக வைக்கவும். பின்னர் வெந்த மாங்காயுடன் வேகவைத்த துவரம்பருப்பை சேர்த்து , உப்பு, சாம்பார் பொடி சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , வெந்தயம், பச்சை மிளகாய், பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்து, கொதிக்கும் குழம்பில் சேர்த்து , கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் பருப்பு குழம்பு தயார் !!!