பைனாப்பிள் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள்:
பைனாப்பிள் – 1
பால்பவுடர் – 2 கப்
தண்ணீர் – 4 கப்
சர்க்கரை – 2 கப்
ப்ரெஷ் க்ரீம் – 2 கப்
பைனாப்பிள் எசென்ஸ் – 2 தேக்கரண்டி
மஞ்சள் ஃபுட் கலர் – சிட்டிகையளவு
செய்முறை:
முதலில் பைனாப்பிள் ஸ்லைஸ்களை சிறிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வேகவைத்துக் கொள்ள வேண்டும். பால் பவுடருடன் வேகவைத்த பைனாப்பிள், க்ரீம், எசென்ஸ், சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்துக் கலந்து ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சுவையான பைனாப்பிள் ஐஸ்கிரீம் தயார்!!!