பூண்டு சின்ன வெங்காய புளிக்குழம்பு
தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 1 கப்
பூண்டு – 1/2 கப்
கறிவேப்பிலை – சிறிதளவு
புளி – எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – சிறிதளவு
வெல்லம் – சிறிதளவு
கடுகு – சிறிதளவு
வெந்தயம் – சிறிதளவு
க.பருப்பு – சிறிதளவு
சீரகம் – சிறிதளவு
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி , கடுகு , வெந்தயம் , க.பருப்பு , சீரகம் , பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி பூண்டு , வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் அதில் சாம்பார்ப் பொடி, மஞ்சள் தூள் , புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். குழம்பு கெட்டியாக வரும் போது வெல்லம் சேர்த்து , எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கினால் சூப்பரான பூண்டு சின்ன வெங்காய புளிக்குழம்பு தயார் !!!