இஞ்சி தொக்கு
தேவையான பொருட்கள்:
இஞ்சி – 2 துண்டுகள்
தனியா – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
தேங்காய் – 1/2 கப்
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்
புளி கரைச்சல்- 1 ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையானஅளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் இஞ்சியை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சியை போட்டு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் தனியாக மல்லி , மிளகாய் , தேங்காய் சேர்த்து வறுத்து, அதனை இஞ்சியுடன் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு , புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதனுடன் அரைத்து வைத்த தேங்காய் இஞ்சி விழுது, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு எண்ணெய் தெளிய இறக்கினால் இஞ்சி தொக்கு தயார் !!!