ஹெர்பல் டீத்தூள்
தேவையான பொருட்கள் :
காய்ந்த துளசி இலை – 1 கப்
காய்ந்த தேயிலை – 1 கப்
காய்ந்த புதினா இலை – 1 கப்
பட்டை – 1
கறுப்பு ஏலக்காய் – 3
பச்சை ஏலக்காய் – 5
மிளகு – 1 டீஸ்பூன்
அதிமதுரப்பொடி – 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் – 1 டீஸ்பூன்
திப்பிலி – 5
ஜாதிக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
செய்முறை:
முதலில் மிக்ஸியில் துளசி இலைகளுடன் புதினா இலைகள் சேர்த்து தூளாக்கி இதனுடன் மிளகு, பட்டை, கறுப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய்த்தூள், காய்ந்த தேயிலை சேர்த்து அரைத்து எடுத்தால் ,ஹெர்பல் டீத்தூள் தயார் !!!