ஹோட்டல் வெண்பொங்கல்
தேவையான பொருட்கள் :
அரிசி – 1 கப்
பாசிப்பருப்பு – 1/4 கப்
சீரகம் – 1 ஸ்பூன்
மிளகு – 1/2 ஸ்பூன்
வரமிளகாய் – 1
முந்திரி – 10
பச்சைமிளகாய் – 1
இஞ்சி – சிறிய துண்டு
பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
நெய் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் பாசிப்பருப்பை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் இதனுடன் அரிசி சேர்த்து கழுவி ஒரு குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் , தேவையான உப்பு , கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து 4 விசில் விட்டு இறக்க வேண்டும் . இதனை நன்கு மசித்து விட வேண்டும் . ஒரு கடாயில் நெய் ஊற்றி மிளகு ,வரமிளகாய் , பச்சைமிளகாய் , இஞ்சி , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் , வறுத்த முந்திரி சேர்த்து பொங்கலில் கொட்டி கிளறினால் சுவையான வெண்பொங்கல் தயார் !!!