வெண்டைக்காய் சூப்
தேவையான பொருட்கள் :
வெண்டைக்காய் – 5
சாதம் – 1 கப்
வெள்ளை மிளகுத்தூள் – காரத்துக்கேற்ப
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெயை விட்டு, நறுக்கிய வெண்டைக்காயை போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய பூண்டு , தண்ணீர் , சாதம் , உப்பு சேர்த்து கொதிக்க விட்டு , சோயா சாஸ், வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க வைத்து, இறக்கினால் வெண்டைக்காய் சூப் தயார் !!!