Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

எம்ட்டி பரோட்டா சால்னா ஹோட்டல் சுவையில் செய்வது எப்படி …

எம்ட்டி பரோட்டா சால்னா

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2

சோம்பு – 1/2 ஸ்பூன்

பட்டை –  1

இஞ்சிப்பூண்டு விழுது –  1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்

காஸ்மீரி மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் –  1/4 ஸ்பூன்

தனியா தூள் – 1 ஸ்பூன்

கரம்மசாலா – 1/2 ஸ்பூன்

பிரிஞ்சி இலை – 1

கறிவேப்பிலை – சிறிது

வெங்காயம் – 1

கல்பாசி – சிறிது

கிராம்பு – 2

பிரிஞ்சி இலை – 1

உப்பு – தேவைக்கேற்ப

புதினா , கொத்தமல்லித்தழை – தேவைக்கேற்ப

அரைக்க :

தேங்காய் – 1/2 கப்

நிலக்கடலை – 1 ஸ்பூன்

பொட்டுக்கடலை –  1/2 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

கிராம்பு – 2

பட்டை – 1

கல்பாசி – சிறிது

பச்சை மிளகாய் – 2

Mt Parotta Salnaக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் எண்ணெய் சேர்த்து பட்டை , கல்பாசி ,கிராம்பு ,பிரிஞ்சி இலை , சோம்பு ,கறிவேப்பிலை , வெங்காயம் சேர்த்து வதக்கி இஞ்சி பூண்டு விழுது , தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் . பின் உப்பு ,மஞ்சள் தூள் ,மிளகாய் தூள் ,தனியாதூள் ,காஸ்மீரி மிளகாய் தூள் , கரம் மசாலா சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும் .இதனுடன் அரைத்த விழுது , தண்ணீர் சேர்த்து கொதித்து எண்ணைய் தெளிந்து வரும்போது  புதினா ,  கொத்தமல்லித் தழை தூவி இறக்கினால் சூப்பரான எம்ட்டி சால்னா தயார் !!!

 

Categories

Tech |