Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ரோட்டுக்கடை காளான் மசாலா செய்வது எப்படி !!!

ரோட்டுக்கடை காளான் மசாலா

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் –  1/2  கிலோ

காளான்  –  200 கிராம்

மைதா – 1/2  கப்

அரிசிமாவு –   2 ஸ்பூன்

சோளமாவு –  3 ஸ்பூன்

மிளகாய்த்தூள் –  1 ஸ்பூன்

கரம் மசாலா-  1 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்

உப்பு –  தேவைக்கேற்ப

எண்ணெய் –  தேவைக்கேற்ப

வெங்காயம் –  3

பச்சை மிளகாய் –  2

கறிவேப்பிலை – சிறிது

தக்காளி ஜாஸ் , சோயா ஜாஸ்  –  தலா  1 ஸ்பூன்

மல்லித்தழை  –  சிறிது

 

செய்முறை :

முதலில் நறுக்கிய முட்டைகோஸ் ,காளான் , மைதா , அரிசிமாவு , சோளமாவு , 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள் , 1/2  ஸ்பூன் கரம் மசாலா , 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ,உப்பு  மற்றும் சிறிது தண்ணீர்  சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.  இதனை 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் , மாவை  சிறிதாக தட்டி பொறித்துக் கொள்ள வேண்டும் .

காளான்க்கான பட முடிவுகள்

பின் மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் , மிளகாய் , கறிவேப்பிலை , மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது , மிளகாய் தூள் , கரம் மசாலா , உப்பு சேர்த்து நன்கு வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு பொறிச்ச காளான் துண்டுகள் , மல்லி இலை , தக்காளி ஜாஸ் , சோயா ஜாஸ் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான காளான் மசாலா தயார் !!!

 

Categories

Tech |