எண்ணெய் கத்தரிக்காய்
தேவையானப் பொருட்கள் :
கத்தரிக்காய் – 1/2 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்
தனியா – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காயத் தூள்- 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு ஏற்ப
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய், தனியா மூன்றையும் வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும். கத்தரிக்காயை பூ வடிவில் நறுக்கி, அதனுள் வறுத்து, அரைத்த பொடி , உப்பு, மஞ்சள் தூள், துருவிய தேங்காய் சேர்த்து ஸ்டஃப் செய்து கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு , ஸ்டஃப்டு கத்தரிக்காய் சேர்த்து, சிம்மில் வைத்து சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவும். மூடி வைத்து அவ்வப்போது கத்தரிக்காயை நன்றாகக் கிளறி விட்டு வெந்ததும் எடுத்தால் எண்ணெய் கத்தரிக்காய் தயார் !!!