அரிசிமாவு பூரி
தேவையான பொருட்கள் :
பச்சரிசி மாவு – 1 கப்
மல்லித்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்
சோம்புத்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
அரிசி மாவுடன் மல்லித்தூள் , சீரகத்தூள் , சோம்புத்தூள் , உப்பு, சிறிது எண்ணெய் மற்றும் தேவையான வெந்நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ள வேண்டும். பின் இதனை 20 நிமிடங்கள் ஊறவிட்டு பூரிகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அரிசிமாவு பூரி தயார் !!!