ரோட்டுக்கடை மட்டன் சால்னா
தேவையான பொருட்கள்:
மட்டன் – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
பட்டை- 1
கிராம்பு – 1
ஏலக்காய் – 2
பச்ச மிளகாய் – 4
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
தனியாத் தூள் – 1 ஸ்பூன்
தேங்காய்ப் பால் – 1 கப்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் மட்டன் துண்டுகளை நன்கு வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு பட்டை , கிராம்பு , சோம்பு , ஏலக்காய் ,வெங்காயம் , தக்காளி , இஞ்சி பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.பின்
மசாலா பொருட்களை சேர்த்து வதக்கி ,மட்டனை சேர்த்து ,கொதிக்க வைத்து தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கினால் சூப்பரான ரோட்டுக்கடை மட்டன் சால்னா தயார் !!!