ரோட்டுக்கடை வெங்காயச்சட்னி
தேவையான பொருட்கள் :
வெங்காயம் – 2
வரமிளகாய் – 5
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு – 3
தக்காளி – 1
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை :
கடாயில் எண்ணெய் ஊற்றி வரமிளகாய் , பூண்டு , வெங்காயம் சேர்த்து வதக்கி பின் முழு தக்காளி பழத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும் . ஆறியதும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்து ,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் கொட்டினால் சுவையான ரோட்டுக்கடை வெங்காயச்சட்னி தயார் !!!