உடலுக்கு குளிர்ச்சியை தரும் நுங்குகடல்பாசி செய்வது எப்படி என்று பார்ப்போம் .
தேவையான பொருட்கள்:
நுங்கு- 6-8
கடற்பாசி-10 கிராம்
தண்ணீர்-2 கப்
பால்-1 லிட்டர்
சீனி- தேவைக்கு ஏற்ப
எஸன்ஸ்- சிறிதளவு
செய்முறை:
கடற்பாசியை இரண்டு கப் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர் கடற்பாசி நன்கு கரையும் வரை காய்ச்சி எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் பாலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். நன்கு கடற்பாசி கரைந்ததும் சீனியை அத்துடன் சேர்க்க வேண்டும் .நுங்குடன் பாதம்,பிஸ்தா,அல்லது ரோஸ் எஸன்ஸ் கலந்து வைக்கவும். கடற்பாசி கொஞ்சம் ஆறியதும் நறுக்கிய நுங்கை கடற்பாசியுடன் சேர்த்து கலந்து விட்டு சிறு சிறு கிண்ணத்தில் ஊற்றி 3-4 மணிநேரம் ஃப்ரிஜ்ஜில் வைத்து பரிமாறினால் சுவையான நுங்குகடல்பாசி தயார் .