சூப்பரான மேங்கோ ஐஸ்க்ரீம் செய்வது எப்படி …
தேவையானபொருட்கள்:
மாம்பழச்சாறு – 2 கப்
க்ரீம் – 2 கப்
பால் – 2 கப்
வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 கப்
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் சர்க்கரையையும் , க்ரீமையும் சேர்த்து நன்கு அடித்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் எசென்ஸ், பால், மாம்பழச்சாறு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து , ஃப்ரீசரில் ஒரு மணி நேரம் வைக்க வேண்டும் . பின்னர் இதனை எடுத்து நன்கு கிளறி மீண்டும் ஃப்ரீசரில் 8 மணி நேரம் வைக்க வேண்டும். இப்போது சூப்பரான மேங்கோ ஐஸ்க்ரீம் தயார் !!!