Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.60 சேமித்து…. ரூ.60,000 தொகையை பெறுவது எப்படி…? வாங்க பார்க்கலாம்…!!

தினமும் 60 ரூபாயை சேமித்து ஓய்வுக்காலத்தில் ரூபாய் 60,000 பென்ஷன்  தொகையை எந்த திட்டத்தில் வாங்க முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.

தேசிய பென்ஷன் திட்டம்:

தேசிய பென்ஷன் திட்டம் என்பது மத்திய அரசால் தொடங்கப்பட்ட மிகச்சிறந்த முதலீடு திட்டம் ஆகும். இந்த திட்டம் 2004 ஆம் வருடத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது. இதை அடுத்து 2009 ஆம் வருடத்தில் அனைத்து பொது மக்களுக்கும் இத்திட்டம் நீடிக்கப்பட்டுள்ளது. 18 முதல் 28 வரை உள்ள எந்த ஒரு குடிமகனும் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்:

இத்திட்டத்தின் கீழ் 8-10% லாபம் கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தின் கீழ் வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரிச் சலுகை கிடைக்கிறது. ரூபாய் 15 லட்சம் கோடி வரை செலவு மிச்சமாகும். இந்த திட்டத்தில் டயர் 1 மற்றும் டயர் 1 என்று இரண்டு பிரிவுகள் இருக்கின்றன. டயர் 2 பிரிவில் உங்களுக்கு தேவைப்படும் போது எப்போது வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

ரூபாய் 60,000 பென்சன் திட்டம்:

இந்த திட்டத்தில் ரூபாய் 60 சேமித்து வந்தால் உங்களுடைய ஓய்வு காலத்தில் மாதம் ரூபாய் 5000 பென்ஷன் கிடைக்கும். அதாவது வருடத்திற்கு ரூ.60 ஆயிரம் பென்ஷன் தொகையை வாங்கலாம்.

கணக்கு தொடங்குவது எப்படி:

enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html என்ற eNPS என்ற இணையதளத்திலிருந்து முதலில் பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் உனக்களின் தொலைபேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்க வேண்டும்.  இதையடுத்து உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு உடனே ஓடிபி நம்பர் வரும்.

அதன் பின்னர் உங்களுக்கு நிரந்தர ஓய்வூதிய கணக்கு எண் (PRAN) ஒதுக்கப்படும். அதை வைத்துத்தான் நீங்கள் தேசிய பென்சன் கணக்கில் LOGIN செய்ய முடியும்.

பின்னர் “eSign” வசதியைப் பயன்படுத்தி நீங்கள் PRAN எண்ணை வைத்து உள்நுழைய வேண்டும். இதற்கும் ஒரு OTP அனுப்பப்படும். ஆதார் இணைப்புக்குப் பிறகு உங்களது விண்ணப்பம் ஆன்லைனில் ஏற்றுக்கொள்ளப்பட்டு சைன் இன் ஆகிவிடும்.

Categories

Tech |