ஓட்ஸ் அடை
தேவையான பொருட்கள் :
புழுங்கல் அரிசி – 1 கப்
ஓட்ஸ் – 1 கப்
துவரம்பருப்பு – 1 கப்
பாசிப்பருப்பு – 1 கப்
வெங்காயம் – 6
காய்ந்த மிளகாய் – 8
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் பருப்புகளை தனித்தனியாக ஊறவைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவைகளை காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைக்க வேண்டும் . இதனுடன் ஊற வைத்த ஓட்ஸை சேர்த்துக் கொள்ள வேண்டும் . ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், கறிவேப்பிலையை வதக்கி தேங்காய் துருவல் சேர்த்து மாவுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு, மாவை அடைகளாக வார்த்து, எடுத்தால் ஓட்ஸ் அடை தயார் !!!