மகாராஷ்டிரா , ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வழக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
மகாராஷ்டிரா , ஹரியானா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு , இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றது . காலை 7 மணி முதலே நீண்ட வரிசையில் நின்று அனைவரும் வருகின்றனர் . ஆங்காங்கே சில வாக்குச்சாவடி மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள ராய் என்ற பகுதியில் சில வாக்குச்சாவடி மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.