Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

எப்படி இருக்கு “கூர்கா” பார்ப்போம் திரை விமர்சனத்தை ….!!

சமீபத்தில் வெளியாகிய கூர்கா படத்தின் திரை விமர்சனம் குறித்து காண்போம்

இயக்குனர் சாம் அன்டன் இயக்கத்தில் ,யோகிபாபு கதாநாயகனாக நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் கூர்கா.இந்த படத்தில் யோகிபாபுக்கு கதாநாயகியாக எலிசா என்ற ஆங்கில பெண் நடித்திருக்கிறார்.மேலும் இந்த படத்தில் ஆனந்தராஜ்,லிவிங்ஸ்டன் மற்றும் சார்லி நடித்திருக்கிறார்கள்.இந்த படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கிறார்.

படத்தின் கதை :

இந்த படம் கூர்காவை மையப்படுத்தி எடுத்தநகைச்சுவை படமாகும்,இதில் யோகிபாபு ஒரு கூர்க்கா குடும்பத்தில் பிறந்து கூர்காவாக வேலை செய்கிறார்.திடீரென போலீஸ் ஆக வேண்டும் என்று போலீஸ் ட்ரைனிங் செல்கிறார்.அந்த ட்ரைனிங்கில் தேர்வாகாததால் ஒரு மாலில் செக்யூரிட்டி ஆக பணிபுரிகிறார்.அப்பொழுது அந்த மாலை தீவிரவாதிகள் சூழ்ந்து அங்கு உழவர்களை பிணயக்கைதியாக பிடித்துக்கொள்கின்றனர். அப்பொழுது அந்த மாலில் உள்ளவர்களை யோகிபாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை
Image result for யோகிபாபு கூர்க்கா

பட விமர்சனம் :

இந்த படம் யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படமாகும் ,இந்த படத்தில் யோகிபாபு வழக்கம்போல் தனது கவுண்டர்களில் மாஸ் காட்டியுள்ளார் என்றுதான் கூறவேண்டும்இந்த படத்தில் இவர் நாயுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டிகள் தாறுமாறாக அமைத்திருக்கிறது..போலீஸ் ட்ரெய்னிங்க்காக அவர் செல்லும் பொழுது அவர் அடிக்கும் நகைச்சுவை லூட்டி படம் பார்ப்பவர்களை சிரிப்பு மழையில் ஆழ்த்தியது.படத்தில் சிறிய நேரம் சில நடிகர்கள் வந்தாலும் அவர்களது நடிப்பில் நகைச்சுவையை பதியவைத்துள்ளனர். மொத்தத்தில் கூர்கா ஒரு நல்ல பொழுதுபோக்கு படம் .

Categories

Tech |