Categories
கிரிக்கெட் விளையாட்டு

எப்படி இருந்த டீம்… உங்களை இப்படி பாக்க முடியல…. புலம்பும் ரசிகர்கள் …!!

நேற்று சென்னை – டெல்லி போட்டியில் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கியதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 185 ரன்களை சேஸ் செய்து டெல்லி கேப்பிடல் அணி அபார வெற்றி பெற்றது . தொடர் தோல்விகளை சந்தித்து, பிளே ஆப் சுற்றுக்கு நுழைய வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்த போட்டியை சந்தித்த சென்னை அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. டெல்லி அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் அதிரடியாக விளையாடிய ஐபிஎல்லில் முதல் சதத்தை பதிவு செய்ததோடு, டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என பல மாற்றங்களுடன் களமிறங்கிய சென்னை அணி இந்த போட்டியிலும் அதேபோல் மாற்றத்துடன் களமிறங்கியது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெகதீஷ் களமிறக்க படாமல் மீண்டும் கேதார் ஜாதவ் களமிறங்கினார். இது சென்னை ரசிகர்களுக்கு மிகவும் ஆத்திரத்தை மூட்டியது. அதுமட்டுமல்லாமல் பலரும் கேதார் ஜாதவ் எதிராக மீண்டும் ட்விட்டரில் பொங்க ஆரம்பித்தனர்.

https://twitter.com/Saravan52692108/status/1317525585183166464

Categories

Tech |