ஜப்பானில் வானில் வட்டமிட்ட பைக்கைக் கண்டு பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர்.
ஜப்பானில் உள்ள A.L.I டெக்னாலஜிஸ் X TURISMO LIMITED EDITION என்னும் புதிய வகை ஹோவர்பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கின் விலை 5 கோடியே 10 லட்சம் ஆகும். இதில் இரு சக்கர வாகனங்களில் வழக்கமாக இருக்கும் எஞ்சினுடன் கூடுதலாக பேட்டரியில் இயங்கும் நான்கு மோட்டார்கள் இணைக்கப்பட்டுள்ளன. இது வானில் 40 நிமிடங்களுக்கு 100 கிலோ மீட்டர் வரை வேகமாக பறக்கும்.
இதன் சோதனை ஓட்டம் ஃபுஜி மலை அருகே நடைபெற்றது. அப்பொழுது வானில் இந்த பைக் வட்டமிட்ட காட்சிகளை கண்டு பார்வையாளர்கள் வெகுவாக ரசித்தனர். குறிப்பாக மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது மக்களை காப்பாற்றுவதற்காக பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.