அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் தொடங்கி உலகையே கதிகலங்க வைக்கும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 5,637,367 பாதிக்கப்பட்டு, 349,290 உயிரிழந்துள்ளனர். அதிகமான பாதிப்பை சந்தித்த நாடாக உலகில் அமெரிக்கா உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவை கொரோனா தொற்று கதிகலங்க வைத்துள்ளது. அங்கு மட்டும் இன்று புதிதாக 6,774 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு 1,713,000 தொட்டது.
அதே நேரத்தில் இன்று ஒரே நாளில் 216 பேர் மரணம் அடைந்ததால் மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை 100,021 பேர் உயிரிழந்த நிலையில் 468,669 குணமடைந்து விடுதிரும்பியுள்ளனர். அடுத்ததாக பிரிட்டனில் 37,048 மரணமும், இத்தாலியில் 32,955 மரணமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.