மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்துமே பூர்த்தியாகும் நாளாக இருக்கும். நண்பர்கள் மத்தியில் நீங்கள் மிகப்பெரிய அளவில் மதிக்கப்படுவீர்கள். சொன்ன சொல்லையும் நிறைவேற்றுவீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை கொள்வீர்கள். இன்று தேவையற்ற சிந்தனை மட்டும் மனதில் உருவாகக்கூடும். சுற்றுப்புற சூழ்நிலையை உணர்ந்து செயல்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதுமானதாக இருக்கும். வாகனத்தில் மிதவேகத்தை பின்பற்றுங்கள்.
உடன்பிறந்தவர்களினால் உதவிகள் இன்று கிடைக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கடைக்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள கடும் பாடுபடுவீர்கள்.
இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். படிப்பில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் பொழுதும் முக்கியமான காரியங்களை மேற்கொள்ளும் போதும் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று நீங்கள் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எதிர்மறையாக பேசுபவரிடமும் நல் அன்பு பாராட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி இலக்கு நிறைவேறும். ஆதாய பணவரவு கிடைக்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். இன்று கோபம் படபடப்பு கொஞ்சம் குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
திடீர் செலவு கொஞ்சம் உண்டாகக் கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சினைகள் ஏற்பட்டு சரியாகும். வாகனங்கள் மூலம் செலவு கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்று பங்குதாரர்களை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். உங்களின் புகழ் கௌரவம் உயரும். வரவேண்டிய தொகை வந்து சேரும்.
புதிய பொறுப்புகள் கிடைக்கும். இன்று மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும். அதுமட்டுமில்லாமல் இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட நிறமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் அணுகுமுறையில் மாற்றம் இன்று நிகழும். நல்ல பலன்களை இன்று அள்ளி செல்வீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்ட கூடும். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பார்கள். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணியை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் தீரும். கலைத்துறையினர் படைப்பு திறன் உயரும். உங்களை அலட்சிய படுத்தியவர்கள் உங்களிடம் வந்து சரணடைய கூடும். உங்களைப் பார்த்து வியக்க கூடும். மற்றவர்கள் பொறாமைப்பட வைக்கக்கூடிய அளவுக்கு உங்களது செயல்பாடுகள் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைதது தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! உங்களின் யதார்த்த பேச்சு சிலர் மனதை சங்கட படுத்தலாம் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்வரும் பணிகளுக்கு முன்னேற்பாடு அவசியமாகும். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவை கொடுக்கலாம். அளவான பணவரவு இன்று கிடைக்கும். போக்குவரத்தில் கவனம் வேண்டும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியும் ஏற்படும். இன்று குடும்பத்தில் அமைதி நிலவும் அரசியல்வாதிகளுக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கிடைக்கும். இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும் பார்த்துக் -கொள்ளுங்கள். வேலை சுமை கொஞ்சம் கூடும். நீண்டநாள் குழப்பங்கள் ஒருவழியாக முடிவுக்கு வரக்கூடும்.
இன்றைய நாள் ஓரளவு வெற்றி பெறும் நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! நிகழ்வுகளைப் பார்த்து மனதில் அதிருப்தி கொள்வீர்கள். நிலுவை பணி உங்களை விரைவாக செயல்பட வைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகமாகவே பணிபுரிவீர்கள். பணவரவை விட செலவு கொஞ்சம் கூடும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசிப்பதால் மனம் கொஞ்சம் இலகுவாக இருக்கும். இன்று பிள்ளைகளை கல்வி பற்றிய கவலை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பலரின் விமர்சனங்களையும் தாண்டி இன்று முன்னேறிச் செல்வீர்கள். அரசியல் துறையர் விமர்சனத்தைத் தவிர்க்கவும்.
இன்று மாணவர்கள் கல்வியில் கொஞ்சம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். பொறுமையை மட்டும் கையாளுங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது சிவப்பு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்மான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! இன்று உங்கள் மனதில் உருவான திட்டம் செயல்வடிவம் பெறும். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். தாராள பணவரவில் கொஞ்சம் சேமிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சகோதரர் வழியில் ஒற்றுமை இருக்கும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும்.
தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்கப் பெறுவார்கள். லாபம் கூடும். சில நேரங்களில் சோர்வுடன் காணப்படுவார்கள். பழைய மனையை நல்ல விலைக்கு விற்பீர்கள். ரத்த சொந்தங்கள் வழிய வந்து உதவி செய்வார்கள். இன்று மனம் மகிழ்வாகவே காணப்படும். மாணவர்கள் மட்டும் கல்வியில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்.
அது மட்டுமில்லாமல் பாடத்தில் இன்று கவனத்தை செலுத்துங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது முக்கியமான வேலை செய்யும்பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிவபெருமான் வழிபாடு உங்கள் வாழ்க்கையை சிறப்பானதாக மாற்றி அமைத்துக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். பணிகளை பொறுப்புனர்வுடன் நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்திலிருந்த இடையூறுகள் விலகிச்செல்லும். எதிர்காலத் தேவைக்கு பணம் சேமிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி பெற அனுகூலம் வளரும். இன்று எல்லா நன்மைகளுமே உங்களுக்கு கிடைக்கும். வீண் அலைச்சலும் குறையும். அடுத்தவரின் உதவியை இன்று நீங்கள் எதிர்பார்க்க மாட்டீர்கள். பிரச்சினையை கண்டு பயப்படாமல் கையாளுவீர்கள்.
கோபமான பேச்சு டென்சன் போன்றவை இன்று குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறக்கூடும். ஒரே நேரத்தில் பல வேலைகளை போட்டு செய்யவேண்டியிருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அது மட்டுமில்லாமல் இன்று பேசும் போது நிதானத்தை மட்டும் கடைபிடியுங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.
கடுமையாகத்தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் பாடத்தில் மட்டும் கவனத்தை செலுத்துவது மிகவும் சிறப்பு. அதுமட்டுமில்லாமல் இன்று நீங்கள் வெளியில் செல்லும் போது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அதே போல் இன்று சிவ பெருமானை வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். நீங்கள் எடுக்க கூடிய காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாளாகவே நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அது போல சொன்ன சொல்லை காப்பாற்ற கடுமையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பு கொஞ்சம் கூடும்.
உழைப்புக்கேற்ற பணம் கிடைக்கும். வெளியூர் பயணம் செய்வதாக இருந்தால் பொருட்கள் மீது கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். அதுமட்டுமில்லாமல் முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்தும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வு மாறுபட்ட தன்மையில் இருக்கும். உங்களிடம் பழகும் நல்ல வரையும் தவறாகக் கருதும் எண்ணம் ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். பணம் வரவு குறைந்த அளவில்தான் இருக்கும். நேரத்திற்கு உணவு உண்பதால் உடல் நலம் சீராக இருக்கும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் உங்களுக்கு டென்ஷனை கொடுக்கக்கூடியதாக இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும்.
பிள்ளைகள் விஷயத்தில் கவனமாக இருங்கள். தாய் தந்தையின் உடல்நலத்தில் எச்சரிக்கை அவசியம். குலதெய்வத்தை வழிபட்டு எந்த காரியத்தையும் தொடங்குங்கள். இன்று உங்களின் நிர்வாகத் திறமை கூடும். நிதி நிலையும் உயரும். அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டக் கூடிய வாய்ப்புக்கள் இருக்கும். பணவரவு கொஞ்சம் இருக்கும். அது மட்டுமில்லாமல் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் தயவு செய்து வளர்த்து கொள்ளுங்கள். காரியத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும் செய்யுங்கள்.
வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் இருங்கள். ஆசிரியர்களின் சொல்படி கேட்டு நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து காரியத்தையும் செய்யுங்கள். காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் வெள்ளை நிறம்
மகரம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய தனித்திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து உருவாகும். தொழில் வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். கூடுதல் அளவில் பணம் வரவு கிடைக்கும். வழக்கு விவகாரங்களில் சமரசத் தீர்வு ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு எதிரியால் இருந்த தொல்லை குறையும்.. இன்று எதையும் செய்யும் முன்பு திட்டமிட்டுச் செய்யுங்கள். கவனத்தை சிதறவிடாமல் செய்யுங்கள்.
பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. மாணவர்கள் எதிலும் மெத்தனமாக செயல்படுவதை தவிர்ப்பதும் முன்னேற்றத்திற்கு உதவும். வீடு கட்ட பூமிபூஜை போடுவீர்கள். செல்வாக்கு உயரும். சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். அதுமட்டுமில்லாமல் பொதுக் காரியங்களை நீங்கள் சிறப்பாக செய்து முடிப்பீர்கள் அதனால் உங்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும்.
ஆலய வழிபாட்டை மேற் கொள்வீர்கள் தெய்வ நம்பிக்கையும் இன்று ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவும் அமையும். அதுமட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!!இன்று தொடர்பில்லாத பணி ஒன்று குறுக்கிட்டு சிரமத்தை கொடுக்கலாம் பார்த்துக்கொள்ளுங்கள். செயல்களில் முன் யோசனையுடன் ஈடுபடுதல் நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பண செலவு ஏற்படும். பெண்கள் நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். இன்று காரிய வெற்றி ஏற்படும். குடும்பத்தில் அமைதியும் இருக்கும். விட்டுக்கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை நாம் பெற முடியும்.. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பூமி வீடு தொடர்பான பிரச்சினைகள் நல்ல முடிவு கொடுக்கும். சகோதரருடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம் படபடப்பும் குறையும். பெரிய பதவிக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்படும்..நீங்கள் அதனால் மகிழ்ச்சியடைவீர்கள். வீடு கட்டுவதற்கான முயற்சியில் வெற்றியை கொடுக்கும். இன்று அனைவரின் ஆதரவுடன் அனைத்து காரியங்களையும் சிறப்பாகவே செய்வீர்கள். என்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
இருக்கட்டும் நீங்கள் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பாருங்கள். மிகப்பெரிய அளவில் நினைவில் வைத்துக் கொள்ள உதவும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கினால் அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று நண்பரிடம் நீங்கள் முன்னர் கேட்ட உதவி இப்போது கிடைக்கும். மனதில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். தொழில் வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.. நல்ல முன்னேற்றத்தை பெரும். பண வரவும் நன்மையை கொடுக்கும். சுற்றுலாக்கள் சென்று வருவதற்கான திட்டங்களையும் தீட்டுவீர்கள். இன்று எதிர்பாராத செலவுகள் கொஞ்சம் இருக்கும் பார்த்துக் -கொள்ளுங்கள். அவ்வப்போது மனதில் மட்டும் சின்னதாக குழப்பம் இருக்கும். தாயின் உடல்நிலையில் கவனமாக இருங்கள்.
தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புக்களை மற்றவரிடம் ஒப்படைக்கும் பொழுது கவனமாக இருங்கள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். கலகலப்பும் இருக்கும். மகிழ்ச்சிக்கு எந்த குறையும் இருக்காது. உங்களின் அன்பை மற்றவர்கள் புரிந்துகொள்வார்கள். அக்கம்பக்கத்தார் உடன் நீங்கள் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுடைய வசீகரப் பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும்.
இன்று மாணவர்கள் மட்டும் கொஞ்சம் கஷ்டப்பட்டுதான் படிக்க வேண்டியிருக்கும். பாடங்களை சரியாக புரிந்து கொண்டு படியுங்கள். பாடங்கள் புரியவில்லை என்றால் சந்தேகம் ஏதேனும் இருப்பின் உடனடியாக ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது. அது மட்டுமில்லாமல் இன்று முக்கிய பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிஷ்ட -த்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்