மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராத விரயங்களை சந்திக்கும் நாளாக இருக்கும். நீங்கள் தேடிச் சென்று பார்க்க நினைத்த நண்பர் ஒருவர் உங்களைத் தேடி வரக்கூடும். இடமாற்றங்கள் போன்றவை நடக்கக்கூடும். அதுமட்டுமில்லாமல் இன்று எல்லா பிரச்சனைகளும் சரியாகும். செல்வ செழிப்பும் ஆரோக்கியமும் ஏற்படும். அடுத்தவர் கொடுத்த வேலையை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். உங்கள் வேலையை செய்து முடிப்பதில் ஆர்வம் காட்ட மாட்டீர்கள். அந்த விஷயத்தில் நீங்கள் கவனம் கொள்ளுங்கள். குடும்பத்தில் உங்களைப் புரிந்து கொள்ளாத நண்பரும் உறவினரும் வழிய வந்து பேசுவார்கள்.
சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். அதுமட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று வெளியூர் பயணங்களை மேற்கொள்வதாக இருந்தால் பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். பயணங்கள் அலைச்சல் தரக் கூடியதாகவே இருக்கும். பங்குச்சந்தையில் உள்ளவர்களுக்கு இன்று லாபம் பன்மடங்கு உயரும். அதனால் மன மகிழ்ச்சி ஏற்படும். இன்றைய நாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாக இருக்கும். மாணவர்கள் கொஞ்சம் கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும்.
தயவு செய்து பாடத்தில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள் அது போதும். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது அடர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இந்த நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்க முடிந்தால் வழங்குங்கள். உங்களுடைய வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் மற்றும் இளம் சிவப்பு நிறம்
ரிஷபம் ராசி அன்பர்களே..!! இன்று அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைத்து மகிழும் நாளாக இருக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிட்டும். உத்தியோக முன்னேற்றம் பற்றிய சிந்தனை தலை தூக்கும். விண்ணப்பித்த புதிய வேலை கிடைக்கும். நீண்ட நாளைய எண்ணங்கள் இன்று நிறைவேறும். இன்று தொழில் வியாபாரத்தில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை சமாளித்து முன்னேறி செல்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது.
சமூக பிரச்சினைகளை கையாளுபவர்கள் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும். நண்பர்களால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். வீணாக சேமிப்புகளைக் கரைக்க வேண்டாம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும்.
ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான காரியத்தை செய்யும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். அனைத்துக் காரியமும் உங்களுக்கு சிறப்பை கொடுக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வ யோகம் ஏற்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் மற்றும் வெள்ளை நிறம்
மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். விஐபிக்களின் சந்திப்பு கிட்டும். வருமானம் இருமடங்காகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவல்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு காணப்படும். மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.
அதுபோல தொழிலில் தேங்கிய சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். உங்களின் கோரிக்கை மேலிடத்தால் ஏற்கப்படும். அது உங்களின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவும். அதுமட்டுமில்லாமல் உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். இன்றைய நாள் தொட்டது துலங்கும் நாளாக இருக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாகக் கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
கடகம் ராசி அன்பர்களே..!! இன்று தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாகவே இருக்கும். தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். இன்று கனவுகளால் தொல்லை கொஞ்சம் ஏற்பட கூடும். சரியான நேரத்திற்கு தூங்க செல்வது நல்லது. அது மட்டுமில்லாமல் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். சரியான உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். பிள்ளைகளிடம் கொஞ்சம் அன்பாகவே நடந்துகொள்ளுங்கள். சேமிப்பு கொஞ்சம் கரையக் கூடிய சூழ்நிலையும் இருக்கும்.
மனைவி வழியில் உங்களுக்கு உதவிகள் உண்டாகும். அது மட்டுமில்லாமல் உங்கள் தேவைகளை அறிந்து மற்றவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். வெளிநாடு செல்வதற்கு காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்திகள் வரும். அதுமட்டுமில்லாமல் அந்த முயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். தந்தைவழி சொத்துக்களை கேட்டு வாங்க முயல்வீர்கள். பல சொத்துக்களையும் நீங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இன்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். மற்றபடி இன்று எப்பொழுதும் போலவே குடும்பத்தில் மகிழ்ச்சிக்கும் கலகலப்புக்கும் எந்த குறையும் இருக்காது.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். கொஞ்சம் கவனமாக பாடங்களில் மட்டும் கவனம் செலுத்திப் படியுங்கள். அதுபோல பாடத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தைரியமாக எழுந்து நின்று ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையை சிறப்பாக்கி கொடுக்கும். தயவுசெய்து இதை முயற்சித்துப் பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
சிம்மம் ராசி அன்பர்களே..!! இன்று யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். அதிகாலையிலேயே விரயங்கள் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். தொழில் வளர்ச்சிக்கு ஒரு சில குறுக்கீடுகள் இருக்கும். அது மட்டுமில்லாமல் மருத்துவ செலவுகள் கொஞ்சம் ஏற்படும். பஞ்சாயத்துக்கள் முடிவடைந்து சிக்கல்கள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும்.
ஆனால் நல்ல பலனைப் பெறுவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஏற்படும். வீண் செலவு ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் விதத்தில் வரவு இருக்கும். பயணங்களில் அலைச்சல் கொடுப்பதாக இருக்கும். கவனம் இருக்கட்டும். பெண்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறும். தடைபட்ட உயர்கல்வியை தொடர்வீர்கள். திருமண பேச்சுவார்த்தை கைகூடும். பூர்வீக சொத்துக்களை மாற்றி அமைக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
ஓரளவு இன்று மகிழ்ச்சியான சூழல் காணப்படும். பேசும்போது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைபிடியுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான வேலையை செய்யும்பொழுது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஸ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வம் சேரும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
கன்னி ராசி அன்பர்களே..!! பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாக இருக்கும். முன்பின் அறிமுகம் இல்லாதவர் கூட உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுப்பார்கள். ஆடை ஆபரண பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்பட்டாலும் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது சிறப்பு. பிள்ளைகளை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நன்மையை கொடுக்கும்.
கலைத் துறையினருக்கு சம்பள பாக்கி கைக்கு வரும். வீண் பேச்சுக்களையும் இரவு நேரப் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. அது போலவே சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். கனவு தொல்லைகளும் கொஞ்சம் இருக்கும். சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று பயணங்களில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். சக மனிதனிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக பேசுங்கள். இன்று சக ஊழியர்களிடம் பழகும் பொழுது கவனமாக பேசுங்கள். பிரச்சினைகளை எந்த விதத்திலும் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம். அதை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுங்கள்.
இன்று குடும்பத்திற்காக நீங்கள் முக்கிய பொருட்களை வாங்க கூடும். தேவையான பொருட்களை மட்டும் வாங்குங்கள் அது போதும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கடுமையாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே..!! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாளாக இருக்கும். அந்நிய தேசத்திலிருந்து அனுகூலமான தகவல்கள் வந்துசேரும். உங்களுடைய கனிவான பேச்சுக்களால் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். வியாபார விரோதம் விலகிச்செல்லும். இன்று அடுத்தவர் குற்றச்சாட்டுகளில் இருந்து சாமர்த்தியமாக விடுபடுவீர்கள். திடீர் மன வருத்தம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக செல்லுங்கள்.
பணத்தேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். மேலதிகாரியின் பாராட்டுகள் கிடைக்கும். சம்பளம் உயர்வு போன்ற பேச்சுவார்த்தைகள் நடக்கும். பதவி உயர்வு கூட கிடைக்கக்கூடிய சூழல் இருக்கும். இன்று அதிகார மட்டத்தில் உங்களது செல்வாக்கு உயரும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மேலோங்கும். சமூகத்தில் அந்தஸ்து பெருகும். இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தக்கூடிய தருணங்கள் அமையும்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். கூடுமானவரை ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். ஆசிரியர்கள் சொல்வதை கேட்டுக் கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பெருகும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெளிர் நீல நிறம்
விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பொது வாழ்வில் புகழ் கூடும் நாளாக இருக்கும். பொருளாதார நிலை இன்று உயரும். கடன் சுமை குறைய புதிய யுக்திகளை கையாளும் நாளாகவும் இருக்கும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதில் தயங்க மாட்டீர்கள். உங்களுக்கு தேவையான உதவி அடுத்தவரிடம் இருந்து கிடைப்பது கொஞ்சம் அரிதாகத்தான் இருக்கும். திடீர் கோபம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். சமாளித்து செல்லுங்கள்.
எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற கவலை மேலோங்கும் பார்த்துக்கொள்ளுங்கள். பெண்களுக்கு பெற்றோரின் ஆலோசனை முன்னேற்றத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மாணவர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாளாக இருக்கும். ஆனால் செய்யும் காரியங்களை மட்டும் கொஞ்சம் கவனமாக செய்வது சிறப்பு. குடும்பத்தாருடன் எந்தவிதமான பிரச்சினைகளும் வேண்டாம். கூடுமானவரை நீங்கள் அனுசரித்துச் செல்லுங்கள். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
உடல் நிலையைப் பொறுத்தவரை எப்போதும் போலவே சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நல்ல படியாக இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள் அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையில் செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்ட வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் மஞ்சள் நிறம்
தனுசு ராசி அன்பர்களே..!! இன்று அமைதி கிடைக்க அடுத்தவர்களின் ஆலோசனைகள் கைகொடுக்கும். அரசியல்வாதிகளால் ஆதாயம் உண்டாகும். வரவும் செலவும் திருப்திகரமாக இருக்கும். வாகன பழுதுகளை சரி செய்யும் எண்ணம் உருவாகும். இன்று எதிர்பாராத வீண் செலவு கொஞ்சம் ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்புள்ளதால் எதிலும் கவனமாக செயல்படுங்கள். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். வீண் அலைச்சலும் கொஞ்சம் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். மாணவக் கண்மணிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
உங்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் பல நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையில் நடக்கும். தொட்டது துலங்கும். புது வீடு கட்டி குடி போக கூடிய சூழ்நிலையும் இருக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். இன்றைய நாள் ஓரளவு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனம் மகிழ்வீர்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்
மகரராசி அன்பர்களே..!! இன்று வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சி அகலும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டாகும். உறவினர் வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கில் திசை திருப்பம் கொஞ்சம் ஏற்படலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கவனம் இருக்கட்டும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும் வாடிக்கையாளருடன் வாக்குவாதமும் ஏற்படக்கூடும். பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் தாமதம் உண்டாகலாம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டி இருக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து செல்லும். கவனம் இருக்கட்டும். அரசால் இன்று ஆதாயமும் கிடைக்கும். சிலர் வீடு மாற்றக்கூடிய சூழல் இருக்கும். அதற்கு ஏற்றார் போல் நீங்கள் கவனமாக இருங்கள். மாணவ கண்மணிகளுக்கு இன்று கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். குடும்பத்தில் கலகலப்பும் ஒற்றுமையும் இருக்கும். சகோதரர் வழியில் உங்களுக்கு ஒத்துழைப்பு ஏற்படும்.
இன்றைய நாள் ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வதாக இருந்தால் மட்டும் கொஞ்சம் கவனமாக செல்லுங்கள். பொருட்கள் மீது கவனம் இருக்கட்டும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். உங்கள் வாழ்க்கையை இன்று மாற்றக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக வழங்குங்கள். பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்க கூடிய மாற்றங்களை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்
கும்பம் ராசி அன்பர்களே..!! இன்று சொந்த பந்தங்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி விடுவீர்கள். குடும்பத்தினர்களின் குறை அகல முயற்சிகளை எடுப்பீர்கள். தொழில் சீராக நடைபெறும். இன்று குடும்பத்தில் திடீர் பிரச்சினைகள் கொஞ்சம் தலைதூக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதமும் பிள்ளைகளின் செயலால் மனவருத்தமும் ஏற்படும். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாகப் பாதுகாப்பது நல்லது.
உறவினர்களிடம் கோபமாக பேசாமல் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வருவது, புதிய பதவி கிடைப்பது, சொத்து வழக்கில் வெற்றி கிடைப்பது போன்றவை இன்று நடக்கும். வீண் கவலைகள் மட்டும் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் சிறப்பாக செய்யுங்கள். வியாபார ரகசியங்களை வெளியில் சொல்ல வேண்டாம். யாரிடமும் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். முடிந்தால் இன்று ஆலயம் சென்று வாருங்கள். தெய்வ நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மனம் கொஞ்சம் அமைதியாக காணப்படும்.
இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய செல்வம் வந்து சேரும். தயவுசெய்து இதை செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே..!! இன்று விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாளாக இருக்கும். மனதிற்கு இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்டதூரப் பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். இன்று எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் கொஞ்சம் இருக்கும். எதைப்பற்றியும் கவலை வேண்டாம் நிதானமாக பாடங்களைப் படியுங்கள்.
காரியத்தில் இருந்த தடை தாமதம் விலகிச் செல்லும். உயர் அதிகாரியிடம் கொஞ்சம் நிதானமாக நடந்துகொள்ளுங்கள். எந்தவித வாக்குவாதங்களும் செய்யாதீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக இருங்கள். வாடிக்கையாளரிடம் பேசும்பொழுது நிதானமாகப் பேசுங்கள். இன்று உடல்நிலையில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள் அது போதும். இன்று புதிய ஒப்பந்தங்கள் தடைப்பட்டு முடியும். இன்றையநாள் ஓரளவு சிறக்கும். மனமகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று வெள்ளிக்கிழமை என்பதால் 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை தானமாக வழங்குங்கள். உங்கள் வாழ்க்கையில் சின்னச் சின்ன மாற்றங்களை நீங்கள் உணருவீர்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்