Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவ பெண்கள் தான் காரணம்”… சர்ச்சையை கிளப்பிய மதகுரு!

பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து  நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு பேசினார்.

அப்போது அவர், “பெண்கள் செய்யும் தவறுகளால் தான் கொரோனா போன்ற தொற்று வியாதிகள் நாட்டை பற்றிக்கொண்டுள்ளதாக சர்ச்சையாக பேசினார்.. ஆனால் பிரதமர் இம்ரான் கான் எதுவுமே சொல்லவில்லை. அமைதியாக இருந்தார். இதனால் அங்கு சர்ச்சை வெடித்துள்ளது.. ஆம்,  அவரது பேச்சை பிரதமர் இம்ரான் கான் தடுத்திருக்க வேண்டும் எனக் கூறும் பெண்கள் அமைப்புகள், அதுகுறித்து எந்த கருத்துமே பிரதமர் கூறாமல் சென்றது மிகவும் வருத்தமளிக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை தொடர்பாக  அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டதை சாடிய மவுலானா, பின்னர் அதற்காக தான் வருந்துவதாகக் கூறினார். இருப்பினும், இதுவரையில் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசியதற்கு மவுலானா எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

பிரபல செய்தித்தாள் நிறுவனமான ‘டான்’ தன் தலையங்கத்தில், இது போன்ற அறிக்கைகள் கவலையாக இருக்கிறது. அவை, ஒரு உயர் மட்ட மேடையிலிருந்து வெளிவருவது பெரும் அதிர்ச்சிக்குள்ளான காரியம் என்று கூறியுள்ளது. பெண்களைப் புண்படுத்தும் விதமாக கருத்துக்களை கூறிய மதகுரு மேடையிலேயே திருத்தப்படவில்லை என்பது ஒரு “அவமானம்” என்றும்  டான் சுட்டிக்காட்டி கூறியுள்ளது.. மேலும் இந்த சர்ச்சைக்கு பாகிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையமும் மதகுருவான  மவுலானாவுக்கு தனது கண்டனங்களை தெரிவித்துள்ளது.

Categories

Tech |