உலகிலேயே அழகில் சிறந்த ஆணாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று உலகில் சிறந்த ஆண் யார் என்ற கருத்து கணிப்பை சமீபத்தில் நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வாக்களித்தனர். இந்த வாக்குகளின் அடிப்படையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இப்போட்டியில் பிரபல ஹொலிவுட் நடிகர்களான கிறிஸ் எவன்ஸ், ராபர்ட் பேட்டின்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.
உலக புகழ்பெற்ற பிரபலங்கள் அனைவரையும் தோற்கடித்து இந்த பட்டத்தை ஹிருத்திக் ரோஷன் பெற்றுள்ளார். ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஹிருத்திக் ரோஷன் தற்போது ‘வார்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.