Categories
டெக்னாலஜி பல்சுவை

திரும்பி வந்துட்டான்னு சொல்லுடா … ஹெச்டிசியின்  ‘டிசையர் 19+’ ஸ்மார்ட்போன் ..!!

ஹெச்டிசி நிறுவனம் தனது புதிய  ‘டிசையர் 19+’ என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

இருபது வருடங்களுக்கு மேலாக எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஹெச்டிசி நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களையும் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை போல நாளடைவில் பின்வாங்கிக் கொண்டது. இந்நிலையில் மீண்டும் இந்நிறுவனம் ‘டிசையர் 19+’ என்ற புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Image result for ‘டிசையர் 19+’ htc

இந்த ஸ்மார்ட்போன் தைவானில் வெளியாகி சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்தப் ஸ்மார்ட்போனின் அறிமுகம் இந்தியாவில் ஹெச்டிசி நிறுவனத்துக்கு பெரிய கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது  6.2 இன்ச்சில் ஹெச்.டி டிஸ்பிளே, 720×1520 பிக்ஸலில் ரெசல்யூசன், 13 எம்பியில் பிரைமரி  சென்சாருடன் கூடிய மெயின் கேமரா, 8 எம்பியில் செகண்டரி சென்சாருடன் வைடு ஆங்கிள் லென்ஸ் பொருத்தப்பட்ட கேமரா,

Image result for ‘டிசையர் 19+’ htc

5 எம்பியில் டெரிட்டரி,  டெப்த்-சென்சிங்  சென்சாருடன் ஒரு கேமரா என மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 3,850 எம்.ஏ.ஹெச் பேட்டரியும், 4 ஜிபி ரேம், 64 ஜிபி ரேம் மற்றும் ஃபிங்கர் பிரின்ட் லாக்-இன் வசதி, மீடியா டெக்  ஹெலியோ பி35 ப்ரோஸஸ்ஸரும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலையானது இன்னும் இந்தியாவில் நிர்ணயிக்கப்படவில்லை.

Categories

Tech |