உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இவர் ஆப்பிள் நிறுவனம் டுவிட்டரில் விளம்பரங்களை நிறுத்திவிட்டதாகவும், அமெரிக்காவின் கருத்துக்கு எதிராக அவர்கள் இருக்கிறார்கலா என்றும் தன்னுடைய ட்வீட் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்தே பல்வேறு நிறுவனங்கள் விளம்பரத்தை நிறுத்திவிட்டது.
இதற்கு காரணம் சில சமூகக் குழுக்கள் விளம்பரதாரர்கள் கட்டாயப்படுத்துவது தான் என்று மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஜெனரல் மில்ஸ், ஆடி, ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் டுவிட்டரில் விளம்பரம் போடுவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்த நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனமும் விளம்பரம் போடுவதை நிறுத்தியுள்ளது. அதாவது ஆப்பிள் நிறுவனமானது விளம்பரம் செய்வதற்காக 220,800 டாலர்கள் செலவிட்ட நிலையில், தற்போது 131,600 டாலர்கள் மட்டுமே விளம்பரத்திற்காக செலவிடுகிறது.
அதோடு தங்களுடைய ஆப்பிள் Appstore-ஐ டுவிட்டரில் இருந்து நீக்கி விடுவதாகவும் அந்நிறுவனம் மிரட்டல் விடுவதாகவும் அதற்கான காரணத்தை கூற மறுப்பதாகவும் மஸ்க் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ஆப்பிள் நிறுவனத்துடன் இப்படி மோதல் போக்கு நிலவுவதால் கூடிய விரைவில் ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக மஸ்க் செல்போன் தயாரிப்பிலும் ஈடுபட்டு விடுவார் என்று பலரும் கூறுகிறார்கள்.