Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பிரச்சனையில்லா….. நிம்மதியான வாழ்க்கை வாழ…… நெருங்கிய உறவுகளுடன் இத பண்ணுங்க…..!!

கட்டிப்பிடி வைத்தியத்தின் நன்மைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

கட்டிப்பிடி வைத்தியம் இந்த வார்த்தையை நமக்கு அறிமுகப் படுத்தியதே நடிகர் கமலஹாசன் தான். வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் இவர் நோயாளிகளுக்கு கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் ஒரு மன மகிழ்வை அவர்கள் பெறுவார்கள். உண்மையாகவே உளவியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் கட்டிப்பிடி வைத்தியம் குறித்து பல்வேறு விதமான அருமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதில்,

ஒருவர் கஷ்டத்தில் இருக்கும்போது அவரை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறும் போது அவர் எளிதில் கவலையில் இருந்து மீண்டு வருவார் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் தாழ்வுமனப்பான்மை, பயம், மன இறுக்கம், தயக்கம் உள்ளிட்டவை நீங்கி முற்றிலும் பாதுகாப்பான உணர்வை அது தரும் என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிப்பிடி வைத்தியம் மூலம் உறவும், நட்பும் மேலும் வலுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |