பொது இடங்களில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதில் இருந்த தடை தளர்த்தப்பட்டதால் பிரான்ஸ் நாட்டு இளைஞர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது வழக்கமான செயலாகும். மேலும் அங்குள்ள பொதுமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி முத்தம் கொடுத்து கொள்வார்கள். அந்த சமயத்தில் ஒரு விதமான சத்தத்தையும் எழுப்புவார்கள். ஆனால் கொரோனா பரவல் காரணமாக சிறிதுகாலம் இந்த வழக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இளம் ஜோடிகள் பெரும் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் பிரான்ஸ் நாட்டில் 70 சதவீத மக்கள் கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொண்டுள்ளனர். இதனால் அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. இந்த நிலையில் பொது இடங்களில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதில் இருந்த தடையும் தளர்த்தப்பட்டுள்ளது. எனவே பிரான்ஸ் அரசின் இந்த அறிவிப்பால் அந்நாட்டில் உள்ள இளைஞர்கள் உற்சாகத்தில் மிதக்கின்றனர்.