பிரபல உள்ளூர் தனியார் விமானசேவை நிறுவனமான இண்டிகோ ஒன்றின் விமானத்தில் பயணித்துத் திரும்பிய பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா, தனது பயணத்தின்போது தன் பொருட்கள் அடங்கிய சூட்கேஸ் சேதாரமடைந்ததால் ட்விட்டரில் அந்நிறுவனத்தை கேலிசெய்யும் தொனியில் சாடி, காணொலி ஒன்றை பகிர்ந்தார்.
தன் சூட்கேஸின் இரண்டு கைப்பிடிகள் உடைந்தும், சூட்கேஸிம் ஒரு சக்கரம் காணாமல் போயுள்ளதையும் குறிப்பிட்டு அந்த ட்விட்டர் பதிவில் வருத்தம் தெரிவித்துள்ள அவர், சூட்கேஸைக் காணொலிப் பதிவு செய்து, தான் விமானத்தில் பயணித்த அனுபவத்தையும் குறிப்பிட்டு அந்நிறுவனத்தை கடுமையாக சாடியுள்ளார். சோனாக்ஷியின் இந்தப் பதிவை அவரது ரசிகர்களும், ட்விட்டர்வாசிகள் பலரும் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
சோனாக்ஷியின் இந்த ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து உடனடியாக மன்னிப்புக் கோரிய தனியார் விமானசேவை நிறுவனம், இதுகுறித்து பொருட்களை கையாளும் குழுவுடன் விவாதிப்பதாகவும் கூறியுள்ளது.
https://twitter.com/sonakshisinha/status/1190959445477474304