கனடாவில் மறுசுழற்சி மையத்தில் கிடந்த குப்பைகளின் இடையில், மனித உடலின் பாகங்கள் கண்டறியப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் Ottawaவில் இருக்கும் Sheffield Road என்னும் பகுதியில் இருக்கும் ஒரு மறுசுழற்சி மையத்தில் கிடந்த குப்பைகளின் இடையில், ஒரு மனித கால் கிடந்துள்ளது. எனவே உடனடியாக அங்கு காவல்துறையினர் குவிந்தனர். அதன்பின்பு, வழக்கை கொலை வழக்குகளை விசாரணை செய்யும் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தற்போது, அந்த உடல் பாகம் James Macauley Teasdale என்ற 58 வயது நபருடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவத்தில் சந்தேகம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, உடற்கூராய்வு நடத்தப்பட்ட பின்பு, James-ன் மரணத்தில் சந்தேகம் இல்லை என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.