திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அம்பை வட்டார மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பாக இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து மனித சங்கிலி போராட்டத்தை தற்போது தொடங்கியுள்ளனர்.
இந்த மனிதச்சங்கிலி போராட்டமானது சேரன்மகாதேவி ஜும்மா பள்ளிவாசலில் தொடங்கி சேரன்மகாதேவி பேருந்து நிலையம் வரை சென்று அங்கிருந்து போராட்டம் நடத்த உள்ளனர். போராட்டத்தில் கலந்து கொள்ளும் மக்கள் காந்தி தேசம் இது காவியமயம் ஆக்க விடமாட்டோம் என கோஷமிட்டபடி செல்கின்றனர். இஸ்லாமியர் மட்டுமின்றி அணைத்து சமய மக்களும் இப்போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.