பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள புதிய பேருந்து நிலையத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பெரியாரிய அம்பேத்கரிய முற்போக்கு இயக்கங்கள், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் சிறுபான்மை இயக்கங்கள் போன்றவை கலந்து கொண்டுள்ளன. இதற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை அவர்கள் தலைமை வகித்துள்ளார். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் கந்தர்வகோட்டை தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ சின்னத்துரை அவர்களும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைத் தலைவரும் கலந்து கொண்டு பேசியுள்ளனர்.
இந்நிலையில் டில்லியில் பெண் காவல்துறை அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும்,விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய இளைஞர்கள், முற்போக்காளர்களை மத்திய அரசு விடுவிக்கக் கோரியும் அவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் உபா என்ற அடக்குமுறை சட்டத்தை வாபஸ் செய்யக்கோரியும், பீமா கோரேகான் சதி தொடர்பான வழக்கில் சிறைக்கைதிகளை விடுதலை செய்யவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.