செவ்வாய் கிரகத்தில் மனிதனின் கண் வடிவம் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய ஆராய்ச்சி நிறுவனமானது, செவ்வாய் கிரகத்தில் எடுத்த ஒரு புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் செவ்வாயின் நிலப்பரப்பில் மனிதர்களின் கண் போன்ற வடிவம் தெரிகிறது. இதற்கு முன்பே நம் பூமியில் இருக்கும் சகாரா பாலைவனத்தில் கடந்த 1965 ஆம் வருடத்தில் இதேபோன்று கண் வடிவம் கண்டறியப்பட்டது.
அது பற்றிய மர்மம் தற்போது வரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் செவ்வாய் கிரகத்திலும் கண் போன்ற வடிவம் தெரிந்துள்ளது. எனினும், விஞ்ஞானிகள் எரிமலை குழம்பு அல்லது படிவங்கள் சென்றுள்ள தடம், கண் போல தெரியலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். எனினும், கண்களில் இருக்கும் நரம்புகள் போலவும் அந்த வடிவத்தில் தெரிகிறது. செவ்வாயில் 400 கோடி வருடங்களுக்கு முன் தண்ணீர் இருந்திருக்கும். அதற்கான ஆதாரமாகவும் அது இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.