ஊரடங்கின் போது அத்தியாவசிய பொருட்களை வாங்க துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழங்கை வீடியோ கால் மூலமாக மனுதாரர் மற்றும் அரசு வழக்கறிஞரிடம் விசாரித்த உயர்நீதிமன்றம் நடுநிலையான அணுகுமுறையை கையாள உத்தரவிட்டுள்ளது.
பொருட்கள் வாங்க வரும் மக்களிடம் காவல் துறையினர் கடுமையாக நடந்து கொள்வதால் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவிப்பதாகவும் மனுதாரர் வாதிட்டார். இதனையடுத்து மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 21ன் கீழ் வாழும் உரிமை எந்த விதத்திலும் பாதிக்கக்கூடாது என நீதிபதி கூறியுள்ளார்.
ஊடங்கை மீறி அவசியமின்றி மக்கள் வெளியே வந்தால் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்றும் தெரிவித்தார். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் காக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு வியாழக்கிழமை அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அச்சத்தை விட வெளிமாநில தொழிலாளர்கள் மனதில் ஏற்பட்ட அச்சம் அதிகமாக உள்ளது. கடைக்கோடி மனிதனும் இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படக் கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.