Categories
தேசிய செய்திகள்

காதலியை சந்திக்க சென்ற இளைஞர்… அடித்து கொல்லப்பட்ட கொடூரம்… மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்..!!

காதல் விவகாரத்தில் தலீத் இளைஞரை அடித்துக் கொன்ற பெண்ணின் உறவினர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க கோரி தேசிய மனித உரிமை ஆணையம் உ.பி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் அசாம்கர் மாவட்டத்தை அடுத்துள்ள குக்கிராமத்தில் வசித்து வருபவர் தான் தலித் சமூகத்தைச் சார்ந்த மனிஷ் ராம்.. இவர் அதே கிராமத்தில் வசித்து வரும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் மிகவும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்..

இதையடுத்து பெண்ணினுடைய குடும்பத்தினரால் தனது மகனுக்கு ஆபத்து ஏற்படும் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து போய் மனிஷ் ராமின் குடும்பத்தினர் அவரை மும்பையில் சில காலம் தங்கி இருக்குமாறு அனுப்பி வைத்துவிட்டனர்.. இதற்கிடையே சொந்த ஊருக்கு திரும்பி வந்த மனிஷ்  மீண்டும் அந்த பெண்ணை சந்தித்து பேசி வந்துள்ளார்.. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவும் அந்தப் பெண்ணை சந்திக்க மனிஷ்  சென்று சென்றபோது, அங்கு பெண்ணின் குடும்பத்தினர் அவரை மடக்கிப்பிடித்து கை கால்களை கட்டி போட்டு அடித்து மிகவும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளனர்..

இதனிடையே இது பற்றி மனிஷ் குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விரைந்து சென்று அவரை மீட்டனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்..  மிகவும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மனிஷை மீட்ட போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.. இறந்த அவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உரிய விளக்கம் அளிக்கக்கோரி உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவு ஆணை ஒன்றை அனுப்பி இருக்கிறது..

Categories

Tech |