ஏன் டிசம்பர் 10 ஆம் தேதி உலக மனித உரிமை தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறித்து விரிவாக காண்போம்.
மனித உரிமை என்கின்ற நாள் டிசம்பர் 10 அன்று பத்தாம் தேதி ஒவ்வொரு வருடமும் உலகெங்கிலும் அனுசரிக்கப்படுகிறது. ஏன் அனுசரிக்கப்படுகிறது என்றால் மனித உரிமைகள் தினம் கொண்டாடப்படுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. உலகம் முழுக்க அனைத்து மனித உரிமைகளும் அனைத்து மக்களுக்கும் எல்லா நாட்டிலும் எல்லா சமயங்களிலும் தடையின்றி அனுபவிக்க சூழ்நிலை இருக்கிற பொழுதுதான் மனித உரிமை தினம் கொண்டாடப்படுவதற்கான ஒரு விஷயமாக இருக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட நிலை இன்னும் வரவில்லை உலகெங்கிலும் ஏதோ ஒரு மூளையில் நிச்சயமாக மனித உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. நிறையபேர் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நிமிடமும் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனித உரிமை தினம் கொண்டாடப்படுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை.
இதனுடைய நோக்கம் ஒவ்வொரு வருடமும் அந்த நாட்களில் மனிதர்களின் நிலை எப்படி இருக்கிறது. இன்னும் என்ன மாதிரியான சிறப்பான மாற்றங்களை மனிதர்களிடைய கொண்டு வர முடியும். மனித உரிமை மீறல்கள் நடந்து இருந்தால் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மாதிரியான விரைவான நீதி கொடுக்க முடியும் போன்ற விஷயங்களைப் பற்றியெல்லாம் பரிசோதனை செய்வதற்கான ஒரு நேரம் தான்.
ஒரு நாள் தான் மனித உரிமை தினம் இதை ஏன் சர்வதேச அளவில் டிசம்பர் 10 ஆம் தேதி தேர்ந்தெடுத்தார்கள் என்றால் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் universal declaration of human rights என்று சொல்லப்படுகிற அந்த சர்வதேச மனித உரிமை பிரகடனம் என்ற சர்வதேச சட்டத்தை ஐக்கிய நாடுகள் சபை டிசம்பர் 10ஆம் நாள் 1948ஆம் வருடம் ஐநா சபையில் நிறைவேற்றினார்கள்.
அப்படியென்றால் உலகத்தில் ஐநா சபையில் இருக்கின்ற எல்லா நாடுகளும் இந்த சர்வதேச மனித உரிமைச் சட்டத்தில் சொல்லி இருக்கின்ற 30 வகையான மனித உரிமைகளையும் அவர்களது நாட்டு மக்களுக்கு நிச்சயம் நாங்கள் வழங்குவோம் எந்த சூழ்நிலையிலும் இந்த 30 வகையான மனித உரிமைகளை நாங்கள் மீற மாட்டோம் அப்படி ஏதேனும் சூழ்நிலையில் யார் மீறினாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம் என்றும்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிச்சயமாக இழப்பீடு பெற்று தருவோம் போன்ற மனித உரிமை மீறல்கள் நடக்காமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று ஐநா சபையில் எல்லா நாட்டு பிரதிநிதிகளும், அந்த நாட்டு அரசாங்கங்கள் மூலமாக சொல்லியிருக்கின்றனர். இந்த உறுதிமொழி கொடுத்த நாள்தான் டிசம்பர் 10. அதனால்தான் டிசம்பர் 10 ஆம் நாளை சர்வதேச மனித உரிமைகள் தினமாக உலகெங்கும் கொண்டாடி வருகிறோம்.