Categories
தேசிய செய்திகள்

“நிர்வாண பூஜையில் நரபலி” செல்வம் பெருக மனித மாமிசம்…. கணவன் கண் முன்னே மனைவியுடன் உல்லாசம்…. கேரளாவில் பகீர்….!!!!

கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், 3 வேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை வருகிற 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்பவர் கேரளாவில் வசித்து வந்துள்ளார். இவர் ரோஸ்லின் என்ற பெண்மணியுடன் சேர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வந்துள்ளார். இவர்கள் 2 பேரையும் ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் பத்தினம்திட்டா பகுதியில் மசாஜ் சென்டர் நடத்தி வரும் லைலா மற்றும் பகவல் சிங் தம்பதியினர் பணக்கஷ்டத்தில் இருந்துள்ளனர்.

இவர்கள் பணக்காரர்களாக மாற முடியும் என்ற நோக்கத்தில் 2 பெண்களையும் நரபலி கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது போலி மந்திரவாதியான முகமது சபி என்பவர் போலியான பேஸ்புக் கணக்கை தொடங்கி பகவல் சிங்கிடம் பேசியுள்ளார். இவரிடம் 2 பெண்களை நரபலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறியுள்ளார். இதற்கு பகவல் சிங் மற்றும் அவருடைய மனைவி லைலா சம்மதம் தெரிவித்ததால் முகமது சபி பத்மா மற்றும் ரோஸ்லினை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த பெண்களிடம் நிர்வாணமாக நடித்தால் அதிக பணம் கிடைக்கும் என்று முகமது சபி கூறியுள்ளார். இதை நம்பிய 2 பேரும் முகமது சபியுடன் சென்றுள்ளனர். இதனையடுத்து 2 பெண்களையும் நிர்வாணமாக முகமது சபி ஒரு கட்டிலில் படுக்க வைத்துள்ளார். அதன் பிறகு 2 பேரின் கழுத்தையும் வெட்டி நரபலி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து 2 பெண்களின் உடம்புகளையும் 60 துண்டுகளாக வெட்டி லைலா மற்றும் பகவல் சிங் சமைத்து சாப்பிட்டு உள்ளனர்.

அதன் பிறகு மீதமுள்ள பாகங்களை மண்ணில் புதைத்துள்ளனர். நரபலி கொடுக்கும் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்த போது பகவல் சிங் கண் முன்னே அவருடைய மனைவி லைலா உடன் முகமது சபி பாலியல் உறவு வைத்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் முகமது சபி மீது காவல் நிலையத்தில் 15 வழக்குகள் இருக்கும் நிலையில் ஒரு மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு இருக்கிறது. இவர் ஒரு பாலியல் சைக்கோ கொலையாளி என்றும் போலீசார் கூறியுள்ளார்.

Categories

Tech |